கல்முனை பிரதேச செயலாளர் பிரிவுக்குள்  பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையே நடைபெற்ற 2015 ம் ஆண்டுக்கான விளையாட்டுப் போட்டி நிகழ்வுகளின் பரிசளிப்பு நிகழ்வு இன்று (23) கல்முனை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
இதில் புள்ளிகள் அடிப்படையில்  கல்முனை பிர்லியன்ட்  விளையாட்டுக் கழகம் முதலிடத்தைப் பெற்று 2015 ம் ஆண்டுக்கான  வெற்றிக் கிண்ணத்தைப் பெற்றுக் கொண்டது.
கல்முனை பிரதேச செயலாளர் எம். எச்.ஏம். கனி   கல்முனை பிர்லியன்ட்  விளையாட்டுக் கழக  விளையாட்டு அணித் தலைவர்  எம். சி. ஹாறுனிடம் வெற்றிக் கிண்ணத்தைக் கையளித்தார்.
 நிகழ்வில் கல்முனை  பிரதேச செயலக பிரதம முகாமைத்துவ உதவியாளர் ஏ. எல். ஜவ்பர். கல்முனை பிரதேச விளையாட்டு அதிகாரி எஸ். எல். சபூர்தீன்.  கல்முனை பிர்லியன்ட்  விளையாட்டுக் கழக  பயிற்றுவிப்பாளர்  எம். எஸ். எம். பளீல். கல்முனை பிர்லியன்ட்  விளையாட்டுக் கழக  பொருளாளர் எம். எம். ஏ. றசாக் ஆகியோரும் கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

 
Top