யு.எம்.இஸ்ஹாக் 

கிழக்கு மாகாண கிராமிய தொழில் நுட்பத்துறைத் திணைக்களமும் கிராமிய அபிவிருத்தி திணைக்களமும் இணைந்து நடாத்தும்  கிழக்கிலங்கை கைத்தொழில் துறையின் ஒரு புதிய யுகம் “மலரும் கிழக்கு கைத்தொழில் கண்காட்சி-2015” நாளை 2015.11.06  வெள்ளிக் கிழமை திருகோணமலை உப்புவெளியில் அமைந்துள்ள  கிழக்கு மாகாண கிராமிய தொழில்துறை திணைக்கள கைத்தொழில்  வலயத்தில் காலை 9.00 மணிக்கு  ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
வெள்ளி,சனி(06,07) ஆகிய இரண்டு தினங்களும் நடை பெறவுள்ள கைத்தொழில் கண்காட்சியை கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அகமதின் அழைப்பின் பேரில் கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்ரின் பெர்ணாண்டோ பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
இவ்வைபவத்தில் கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் , கிழக்குமாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் டபிள்யூ.ஜி.எம். ஆரியவதி கலப்பதி , கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயூதபாணி , கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர், கிழக்கு மாகாண சபை தவிசாளர் ஏ.பீ. கலபதிக்கே சந்திரதாஸ மற்றும் கிழக்கு மாகாண உறுப்பினர்களும் 
 சிறப்பு அதிதிகளாக  கிழக்கு மாகாண பிரதம செயலாளர் டி.எம்.எஸ். அபேகுணவர்த்தன, முதலமைச்சு செயலாளரும்  மற்றும் உள்ளுராட்சி கிராமிய தொழில் துறை கிராமிய அபிவிருத்தி அமைச்சின் செயலாளருமான யூ.எல்.ஏ.அஸீஸ் , சுகாதார அமைச்சின் செயலாளர் மு.கருணாகரன் ,விவசாய அமைச்சின் செயலாளர் எஸ்.சிவநாதன் ,கல்வி அமைச்சின் செயலாளர் ஜே.எஸ்.டீ.எம்.அஸங்க அபேவர்த்தன , மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழு செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜீ. திஸாநாயக்க உட்பட கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளதாக கிழக்கு மாகாண கிராமிய தொழில்நுட்பத் துறைத் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் கு.குணநாதன் , கிழக்கு மாகாண  கிராமிய அபிவிருத்தி திணைக்கள மாகாணப் பணிப்பாளர் கா.அருந்தவராஜா ஆகியோர் அறிவித்துள்ளனர்.

கருத்துரையிடுக

 
Top