2014 ஆம்  ஆண்டு  நடை பெற்ற  கிழக்கு மாகாண மட்ட  தமிழ் மொழி மூல விஞ்ஞான  வினாடி வினாப் போட்டியில்  கல்முனை கல்வி வலயத்துக்கு முதலிடம் கிடைத்துள்ளது.  சம்பியன் கிண்ணத்தை  வலயக் கல்வி அலுவலகத்துக்கு ஒப்படைக்கும்   நிகழ்வு இன்று  கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் இடம் பெற்றது.

கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் தலைமையில் இடம் பெற்ற  நிகழ்வில் சம்பியன் கிண்ணம்  வழங்கப் பட்ட         விஞ்ஞான பதில் உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சௌதுல் அமீன் வலயத்துக்கான  கேடயத்தை  வலயக்கல்விப் பணிப்பாளரிடம் ஒப்படைத்தார் . 

கேடயத்தைப் பெற்றுக் கொண்ட வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் அங்கு உரையாற்றும் போது  மாகாண  மட்டத்தில் முதலிடம்  பெறுவதற்கு  காரணமானவர்களாக இருந்த  கல்முனை கார்மேல் பற்றிமா , கல்முனை அல் -அஸ்கர், காரைதீவு  விபுலானந்தா , காரைதீவு ஆர்.கே.எம் பெண்கள்  பாடசாலைகளின் மாணவர்களும் ,வழிகாட்டிய ஆசிரியர்களும்  குறிப்பாக விஞ்ஞான பதில் உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சௌதுல் அமீன் அவர்களும்  பாராட்டப் படவேண்டியவர்களாகும் என தெரிவித்தார் 

வைபவத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான எஸ்.எல்.அப்துல் ரஹீம் ,பீ .எம்.வை.அரபாத்  உட்பட கோட்டக்  கல்விப் பணிப்பாளர்களும் ,உதவிக் கல்விப் பணிப்பாளர்களும் , ஆசிரிய ஆலோசகர்களும்  கலந்து சிறப்பித்தனர்.கருத்துரையிடுக

 
Top