கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் ஆரணி ஹென்றிக் என்ற மாணவி தரம் ஐந்து புலமைப் பரிசுப் பரீட்சையில் 180 புள்ளிகளைப் பெற்று பாடசாலையில் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளார் . 
இவர் ரொட்னி ஹென்றிக் வாசுகி ஹென்றிக்  ஆகியோரின் புதல்வி   ஆவார் . இவர் ஆங்கில தினப் போட்டிகளில்  பாவோதலில் 2013ஆம் ஆண்டு தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தையும் ,2014ஆம் ஆண்டு தேசிய மட்டத்தில் மூன்றாம் இடத்தையும்  பெற்று  கல்லூரிக்கு பெருமை சேர்த்தார் . 2014ஆம் ஆண்டு நடை பெற்ற தமிழ் மொழி தினப் போட்டியில்  இசையும் அசைவும் போட்டியில்  மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்றவராவார் .

கருத்துரையிடுக

 
Top