நீதியான சமூகத்துக்கான தேசிய இயக்கத்தின் தலைவர், கோட்டே ஸ்ரீ நாக விகாரையின் விகாராதிபதியுமான மாதுலுவாவே சோபித தேரரின் உடல் தகன கிரியைகள் இடம்பெறும் தினமான எதிர்வரும் புதன்கிழமை (12) நாட்டின் சகல மதுபானக் கடைகள் மற்றும் இறைச்சிக்கடைகளை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
 
இதேவேளை கொழும்பிலுள்ள அனைத்து சினிமா கொட்டகைகளையும் மூடும்படி, உள்விவகார அமைச்சு அறிவித்துள்ளது.
 
இன்று (09) இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின்போதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக, உள்விவகார அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

கருத்துரையிடுக

 
Top