மாதுலுவாவே சோபித தேரரின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் நவம்பர் 12 ஆம் திகதி ஸ்ரீ  ஜயவர்தனபுர கோட்டே, பாராளுமன்ற மைதானத்தில இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அன்றைய தினத்தை (12) தேசிய துக்கதினமாக பிரகடனப்படுத்துவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

கடந்த வாரம், சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற அவர், சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
சோபித தேரருக்கு, இலங்கையில்  தனியார் மருத்துவமனை ஒன்றில் இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து மேலதிக சிகிச்சைகளுக்காக கடந்த கடந்த 03ஆம் திகதி விசேட விமானத்தின் மூலம் சிங்கப்பூர் சென்றிருந்தார்.
 
அங்கு சிங்கப்பூர் நாட்டின் இரு வைத்தியர்கள் மற்றும்  இலங்கையின் வைத்தியர் ஒருவரின் கீழ் சிகிச்சை பெற்று வந்தார்.

கருத்துரையிடுக

 
Top