எதிர்வரும் 12ம் திகதியுடன் 2015ம் ஆண்டிற்கான வாக்காளர் இடாப்பில், வாக்காளர்களின் பெயர்கள் உள்வாங்கப்படுவதற்கான சந்தர்ப்பம், நிறைவடையவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.
ஆனால் இது தொடர்பாக கல்முனை பிரதேசத்தில் நடவடிக்கை எடுக்கப் பட்டதாக தெரியவில்லை  கிராம சேவையாளர்களை கல்முனை பிரதேச செயலாளர் வலியுறுத்த வேண்டுமென கல்முனை பிரதேச மக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர் .
எதிர்வரும் வருடம் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், வாக்களர்களைப் பதிவு செய்வதில் தேர்தல்கள் திணைக்களம் தீவிரம் காட்டி வருகின்றது.

இதனால் வாக்காளர் இடாப்பு திருத்த வேலைகளின் இறுதிக்கட்ட பணிகள் மாவட்ட செயலகங்களில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார்.

இதனால் தமது பெயர்கள் உள்ளடக்கப்படாதவர்கள் அதற்கான உரிமை கோரும் விண்ணப்பங்களை குறிப்பிட்ட திகதிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்பிவைக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கருத்துரையிடுக

 
Top