நாளை (07.11.2015) இடம்பெறவுள்ள இலங்கையின் மூன்றாவது இளைஞர் பாராளுமன்றத் தேர்தலுக்காக அம்பாறை மாவட்டத்தில் 05 ஆசனங்களுக்காக 49 பேர் போட்டியிடுகின்றனர். இதில் 04 தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு தொகுதிக்கும் தலா ஒரு உறுப்பினர் தெரிவு செய்யப்படுவதோடு மீதமான உள்ள ஒரு ஆசனம் போனஸ் முறையில் பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.

இதேவேளை இம்மாவட்டத்தில் வாக்களிப்பதற்கு 18,920 பேர் தகுதி பெற்றுள்ளனர். அந்த வகையில் தொகுதிவாரியாக
அம்பாறையில் : 4,735 பேரும், சம்மாந்துறையில் : 4,276 பேரும், கல்முனையில் 2,503 பேரும், பொத்துவிலில் 7,406 பேரும் வாக்களிக்கத்தகுதி பெற்றுள்ளனர்.

மேலும் நாளை காலை 8.00 மணி தொடக்கம் பி.ப 3.00 மணி வரை இடம்பெறவுள்ள இவ்வாக்களிப்பானது அந்தந்த பிரதேச செயலகங்களில் அமையபெற்றுள்ள வாக்களிப்பு நிலையங்களில் இடம்பெறவுள்ளதோடு, வாக்கெண்ணும் பணிகளும் குறிப்பிட்ட பிரதேச செயலாளரின் தலைமையின் கீழ் அப்பிரதேச செயலகத்திலே இடம்பெறவுள்ளதாக அம்பாறை மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ஏ.எச். உமர்லெவ்வை தெரிவித்தார்.

இதேவேளை நாளை இடம்பெறவுள்ள 03வது இளைஞர் பாராளுமன்றத்திற்கு 225 பேர் தெரிவு செய்யப்படவுள்ளதோடு 168 பேர் தேர்தல் மூலமும், 57 பேர் தகமை அடிப்படையிலும் தெரிவு செய்யப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

கருத்துரையிடுக

 
Top