( அஸ்ஹர் இப்றாஹிம்)

இலங்கை பொறியியலாளர் நிறுவனம் அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையில் கொழும்பு பண்டாரநாயக சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஒழுங்கு செய்திருந்த டெக்னோ கண்காட்சியில் Android மென்பொருள் ஆக்கப் போட்டியில் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி மாணவர்கள் மூவர் தங்கப் பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இலங்கையின் பல பாகங்களையும் சேர்ந்த பிரபல பாடசாலைகள் பங்கேற்ற மேற்படி மென்பொருள் ஆக்கப் போட்டியில் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில் உயர்தர தொழில்நுட்ப பிரிவில் கல்வி பயிலும் எம்.எச்.அஹமட் மஹ்தி , எம்.எச்.அப்ரத் சுஜா மற்றும் ஏ.ஸி.முஹம்மட் ஜீஸான் ஆகிய மூவருமே இவ்வாறு தங்கப் பதக்கம் பெற்ற மாணவர்களாகும்.
அண்மைக் காலமாக இக்கல்லூரியில் உயர்தர தொழில்நுட்ப பிரிவில் கல்வி பயிலும் மாணவர்கள் தேசிய ரீதியிலும் , மாகாண ரீதியிலும் பல சாதனைகள் புரிந்து வருவதுடன் புத்தாக்கத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
சாதனை படைத்த மாணவர்களுக்கும்  உயர்தர தொழில்நுட்ப பிரிவு பகுதித்தலைவர் ஏ.ஆதம்பாவா , தகவல்தொழில்நுட்ப பாட பொறுப்பாசிரியர் எம்.ஐ.எம்.பஸீல் உள்ளிட்ட தொழில்நுட்ப பிரிவு ஆசிரியர்கள் , இணைப்பாடவிதானத்திற்கு பொறுப்பான பிரதி அதிபர் ஏ.பி முஜீன் ஆகியோருக்கு கல்லூரி அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீன் , பிரதி அதிபர்கள் , உதவி அதிபர்கள் , ஆசிரியர்கள் , கல்விசாரா உத்தியோஸ்தர்கள் , ஊழியர்கள் , பழைய மாணவர் சங்க பிரதி நிதிகள்  , பாடசாலை அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகள்   பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் பிரபல இடங்களில் அமைந்துள்ள அரச தங்குமிடங்களை கண்டறிந்து கொண்டு கையடக்க தொலைபேசியினூடாக அவற்றை முன்கூட்டியே பதிவு செய்து கொள்வதற்கான மென்பொருளை இம்மாணவர்கள் ஆக்கியமைக்காகவே இவ்விருதும் பதக்கமும் சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.


கருத்துரையிடுக

 
Top