கல்முனை கார்மல் பற்றிமா தேசிய பாடசாலையின் விளையாட்டு மைதானத்தை அபிவிருத்தி செய்துதருமாறு பாடசாலை நிர்வாகம் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸிடம் விடுத்த வேண்டுகோளை அடுத்து பிரதி அமைச்சர் தலைமையிலான குழுவினர் இம்மைதானத்தினை அபிவிருத்தி செய்வதற்கான பூர்வாங்க நடவடிக்கையினை மேற்கொள்ளும் பொருட்டு சமீபத்தில் நேரடியாக சென்று பார்வையிட்டனர்.

பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸுடனான இவ்விஜயத்தின் போது கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.ஜலீல், பொறியியலாளர் என்.அருண், பாடசாலையின் அதிபர் அருட் தந்தை பிறைனர் செல்லர், பாடசாலையின் முன்னாள் அதிபர் அருட் சகோதரர் ஸ்டீபன் மத்தியு உள்ளிட்டவர்கள் சென்றிருந்தனர்.

இதன்போது மைதானத்தின் தற்போதைய நிலமைகளை நேரில் கண்டறிந்த பிரதி அமைச்சர், இதனை அபிவிருத்தி செய்வதற்கான மதிப்பீட்டு அறிக்கைகளை உடன் தயாரித்து தருமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

கருத்துரையிடுக

 
Top