அம்பாறை மாவட்ட தமிழ் எழுத்தாளர் மேம்பாட்டுப்பேரவையின் ஸ்தாபக உறுப்பினரான அமரர் திருமதி கமலாம்பிகை லோகிதராஜா ( ஓய்வுநிலை ஆங்கிலபாட உதவிக்கல்விப் பணிப்பாளர் ) அவர்களுக்கான “நினைதல்” நிகழ்வு இன்று  27.10.2015 செவ்வாய்க்கிழமை பி.ப.3மணிக்கு கல்முனை “நால்வர்கோட்டம்” மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

பேரவையின் தலைவர் தேசமான்ய ஜலீல் ஜீ தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் குடும்ப உறவுகள் பேரவையினர் இலக்கிய அபிமானிகள் என பலதரப்பட்டவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். உபதலைவர் பரதன்கந்தசாமி வரவேற்புரை நிகழ்த்துவார்.

நினைவுப்பேருரைகளை கிழக்குப்பல்கலைக்கழக தமிழ்த்துறைப் பேராசிரியர் செ.யோகராசா எழுத்தாளர் ஏ.ஏ.கபூர் கல்முனை உவெஸ்லி கல்லூரி அதிபர் வி.பிரபாகரன் எழுத்தாளர் கலாபூசணம் எஸ்.அரசரெத்தினம் ஆகியோர் நிகழ்த்துவர்.
நினைவுப்பாவை கவிதாயினி சிசிலியாவும் நினைவுக்கவியை கவிதாயினி கலைமகள் ஹிதாயாவும் நிகழ்த்துவர். அம்பாறை மாவட்ட தமிழ் எழுத்தாளர் மேம்பாட்டுப்பேரவையின் வெளியீட்டுப்பிரிவு தயாரித்த “ கமலதீபம்” நினைவுமலர் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.

வெளியீட்டுப்பிரிவின் சார்பில் கவிப்புனல் அசீஸ் சேமநலன்பிரிவின் சார்பில் பூவை.சரவணன் ஆகியோர் நினைவு மலரை தலைவரிடம் கையளிக்க அவர் முதற்பிரதியை அமரரின் மகளான திருமதி சுபோ விவேகானந்தராஜாவிடம் வழங்கிவைப்பார். நன்றியுரையை பொதுச்செயலாளர் வேதசகாவும் ஏற்புரையை திருமதி சுபோவும் நிகழ்த்துவார்கள்.

கருத்துரையிடுக

 
Top