கிழக்கு மாகாண சபையின் புதிய உறுப்பினராக மீண்டும் கல்முனை ஜவாத்  இன்று புதன்கிழமை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.
 கிழக்கு மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினராக பதவி வகித்த ஜெமீல், கடந்த பொதுத் தேர்தல் காலத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொண்டு, அந்தக் கட்சிக்கு ஆதரவாக பிரசாரங்களில் ஈடுபட்டு வந்தார். மேலும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற வேட்பாளராகவும் அவர் குறிப்பிடப்பட்டிருந்தார். இதனையடுத்து, முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமைவாக, கட்சியிலிருந்து ஜெமீல் நீக்கப்பட்டமைக்கு ஏற்பட்ட வெற்றிடத்துக்கே தேர்தல்கள் ஆணையாளரால் ஜவாத் நியமிக்கப்பட்டுள்ளார். 
கே.எம். ஜவாத் முதலாவது கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினராக பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது. இந் நிகழ்வில், உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ரன்ஜித் மதும பண்டா, அமைச்சர் ரவூப் ஹக்கீமின் பிரத்தியேகச் செயலாளர் எம். நயீமுல்லாஹ், இணைப்புச் செயலாளர்களான ரஹ்மத் மன்சூர், யூ.எல்.எம்.என். மூபீன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

 
Top