சக்தி தொலைக்காட்சியின் 17ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கல்முனை சந்தாங்கேணி ஐக்கிய விளையாட்டு மைதானத்தில் அத்தொலைக்காட்சி நிறுவனத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கலை விழா கடந்த வெள்ளிக்கிழமை மாலை ஆரம்பமானது.
கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு நிகழ்வை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.
இதன் ஒரு அங்கமாக கண்காட்சி உதைபந்தாட்டப் போட்டி ஒன்றும் இடம்பெற்றது. இதில் கல்முனை பிரில்லியண்ட் விளையாட்டுக் கழகம், சனிமௌண்ட் விளையாட்டுக் கழகம் என்பன பங்குபற்றியிருந்தன. இப்போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் பிரில்லியண்ட் வெற்றியீடியது.
இந்நிகழ்வில் கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.டபிள்யூ.அப்துல் கப்பார், ஆசிய பவுண்டேஷன் நிகழ்ச்சித் திட்ட அதிகாரி எம்.ஐ.எம்.வலீத், அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தின் உப தலைவர் யூ.கே.ரமீஸ், கல்முனை வர்த்தக சங்கத் தலைவர் கே.எம்.ஹாத்திம், ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டதுடன் பெரும் எண்ணிக்கையிலான ரசிகர்கள் இப்போட்டியையும் ஏனைய நிகழ்ச்சிகளையும் கண்டுகளித்தனர்.


கருத்துரையிடுக

 
Top