சர்வதேச ரீதியாக பல்வேறு தினங்கள் கொண்டாடப்படுகின்றவேளை ஆசிரியர்களையும் மதித்து அவர்களுக்கான ஓர் தினத்தை ஐக்கிய நாடுகள் அமைப்பகம் பிரகடனப் படுத்தியுள்ளது.
ஆசிரியர்களின் கெளரவம், மேன்மை, உயர்வு, மாண்பு போன்றவைகளை எடுத்தியம்புவதற்காக வருடந்தோறும் ஆசிரியர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
யுனெஸ்கோவினால் பிரகடனப்படுத் தப்பட்ட ஆசிரியர் தினம் 1994 ஆம் ஆண்டு ஒக்டோபர் 6 ஆம் திகதி முதல் தடவையாக இலங்கையில் கொண் டாடப்பட்டது. சமூகத்தின் ஏணிகளாகவும் தோணிகளாகவும் இருந்து வழியேற்பட பாலங்களாய் அமைந்துள்ள ஆசிரியர்களது பல்வேறு பிரச்சினைகளும் ஆராயப்பட வேண்டிய நாள் இன்றாகும்.
‘எங்கே நடப்படுகிறாயோ அங்கே மலராகு’ என்ற பொன்மொழிக்கு எடுத் துக்காட்டாய் இருப்பவர்கள் ஆசிரியர்கள்தான்.
அவ்வாறான ஆசிரியர்  ஒருவரை  வீடு தேடி சென்று அவரிடம் சுகம் விசாரித்து அவருக்கு அன்பளிப்பு வழங்கப் பட்ட நிகழ்வொன்று இன்று கல்முனை பிரதேசத்தில் இடம் பெற்றது..
மாணவனாக இருந்த காலத்தில் தனக்கு ஒழுக்கத்தையும் ,மார்க்க விழுமியத்தையும் ஒருங்கே கற்பித்த ஆசானை தேடிச்சென்றவர் கல்முனை பிரதேச செயலகத்தில் திவிநெகும தலைமைப் பீட முகாமையாளராக பணி  புரியும் ஏ.ஆர்.எம்.சாலிஹ் ஆவார் .
மருதமுனை அல் -மானார் மத்திய கல்லூரியில் படிக்கும் காலத்தில் ஆசிரியராக சேவையாற்றிய இலங்கையின் முதலாவது ஹாபிழ் பட்டத்தை 1957 ஆம் ஆண்டு பெற்ற 83 வயதுடைய  நட்பிட்டிமுனையை சேர்ந்த ஒய்வு பெற்ற  ஆசிரியர் அல் -ஹாபிழ் அஹமட் லெப்பை - இப்ராலெப்பை அவர்கள் தனது வீட்டில் ஆரோக்கியமாக இருக்கின்றார் . அன்னவரை வீடு தேடிச்சென்ற திவிநெகும தலைமைப் பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ் தனது ஆசிரியரின் சுகம் விசாரித்து அன்பளிப்புகளும் வழங்கினார் . இதன் போது  மருதமுனை எனது வீடு போன்றது என்றும் அவருடன் நெருங்கிப் பழகிய பலரையும் விசாரித்ததாகவும் தெரிவிக்குமாறும் அல் -ஹாபிழ் இப்ராலெப்பை ஏ.ஆர்.எம்.சாலிஹ் இடம் தெரிவித்தார் 

கருத்துரையிடுக

 
Top