(பிஎம்.எம்.ஏ.காதர்)
சாய்ந்தமருதைச் சேர்ந்த கலாபூஷணம் எம்.எம்.ஆதம்பாவா எழுதிய “குழந்தைகள் வெள்ளைக் காகிதங்கள்”நூல் வெளியீடு சாந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் கல்வியலாளர் கலாபூஷணம் ஏ.பீர்முகம்மட் தலைமையில் நடைபெற்றது.
இதில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீனும் ,கௌரவ அதிதியாக தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்செய்க் எம்.எஸ்.எம்.ஜலால்தீனும்  கலந்து கொண்டனர்.

இங்கு நூலின் வெளியீட்டுரையை கொழும்பு பல்கலைக்கழக விரிவுரையாளர் ஏ.றயிஸா ஹஸ்மத் நிகழ்த்தினார். நூல்பற்றிய  அறிமுக உரையை கவிஞர் நவாஸ் சௌபி நிகழ்த்தினார்.நூலின் முதற் பிரதியை வர்த்தகர் எம்.எம்.எம்.முபாறக் பிரதம அதிதியிடமிருந்து பெற்றுக் கொண்டார்.
சிறப்புப் பிரதியை கௌரவ அதிதியிடமிருந்து  அஷ்செய்க் எஸ்.எச்.ஆதம்பாவா பெற்றுக் கொண்டார்.நூலாசிரியர் கலாபூஷணம் எம்.எம்.ஆதம்பாவா ஏற்புரையையும்,நன்றியுரையையும் நிகழ்த்தினார்.    

கருத்துரையிடுக

 
Top