யு.எம்.இஸ்ஹாக்
கல்முனை ஜிம்ஹானா விளையாட்டுக்கழகம் ஒழுங்கு செய்திருந்த கழக வீரர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்எம்.எம்.ஹரீஸ் அவர்களை வரவேற்கும் நிகழ்வும் நேற்று இரவு  கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி எம்.எஸ்.காரியப்பர் மண்டபத்தில் கழகத்தின் தலைவர் எம்.ஏ.சலாம் ஆசிரியர் தலைமையில் இடம்பெற்றது.


இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாகவும் , ஓய்வுபெற்ற உடற்கல்வித்துறை விரிவுரையாளர் எம்.ஐ.எம்.முஸ்தபா கௌரவ அதிதியாகவும் , கழகத்தின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி ஏ.எம்.ரொஸன் அக்தர் , கழகத்தின் முகாமையாளரும் இலங்கை வங்கியின் கல்முனைக்கிளை உதவி முகாமையாளருமான ஏ.எம்.எம்.முஸ்தகீம் , கழகத்தின் செயலாளர் எஸ்.எல்.எம்.லாபிர் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

கழகத்தின் வெற்றிக்கு பல வகைகளிலும் பங்களிப்பு செய்த கழக வீரர்கள் மற்றும் முகாமைத்துவ உறுப்பினர்கள் நினைவு சின்னம் வழங்கியும் கழகத்தின் தலைவர் எம்.ஏ.சலாம் மற்றும் கழகத்தின் செயலாளர் எஸ்.எல்.எம்.லாபிர்  ஆகியோர் பொன்னாடை போர்த்தியும் கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்வில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் கழக உறுப்பினர்களால் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.கருத்துரையிடுக

 
Top