வறிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி வறுமைப் பிடியிலிருந்து அவர்களை மீட்டு வருமானத்தை தேடும் வகையில் அவர்களை ஊக்கப் படுத்தும் அடிப்படையில் 
கல்முனை பிரதேச செயலக பிரிவில் உள்ள  திவிநெகும பயனாளிகளின் உற்பத்திபொருள் விற்பனையும் கண்காட்சியும் நேற்று திங்கட் கிழமை  12 கல்முனைக்குடி  கிறீன்  பீல்ட்  சமுதாய அடிப்படை வங்கி முற்றத்தில்  நடை பெற்றது .

திவி நெகும  தலைமைப் பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ் தலைமையில் இடம் பெற்ற வைபவத்தில்  விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ்  பிரதம அதிதியாக  கலந்து கொண்டு கண் காட்சியை திறந்து வைத்தார் .
கல்முனை பிரதேச செயலாளர்  எம்.எச்.முகம்மட்  கனி , திவி நெகும மாவட்டப் பணிப்பாளர்  சண்டுருவன் அனுருத்த  ஆகியோர் விசேட அதிதிகளாகவும் , பிரதேச செயலக கணக்காளர் எம்.எம்.எம்.ஹுசைன்தீன் , ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் , மற்றும் திவி நெகும மகா சங்க முகாமையாளர் எஸ்.எஸ்.பரீரா ,திட்ட முகாமையாளர் ஏ.சி.அன்வர் , திவி நெகும வங்கி முகாமயாளர்களான  எம்.எம்.முபீன் ,எஸ்.சதீஸ் ஆகியோர்  அதிதிகளாகவும் கலந்து கொண்டனர் .

நேற்று மாலை நடைபெற்ற இரண்டாம் கட்ட  நிகழ்வில் வீட்டு லொத்தர் சீட்டிழுப்பில் வெற்றி பெற்றவர்களுக்கான சாண்றிதழை திவி நெகும மாவட்டப் பணிப்பாளர்  சண்டுருவன் அனுருத்த கலந்து கொண்டு வழங்கி வைத்தார்


கருத்துரையிடுக

 
Top