அம்பாறை மாவட்டத்தில் இன்று நடை பெறவிருந்த உண்ணாவிரதப் போராட்டம் ஆலய வழிபாட்டுடன் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டது.

கைது செய்யப்பட்டுள் தமிழ் அசசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு  தெரிவித்து அம்பாறை மாவட்டத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.ராஜேஸ்வரன் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நற்பிட்டிமுனை ஸ்ரீ அம்பலத்தடி வினாயகர் ஆலய முன்றலில் இன்று நடை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் ஜனாதிபதியின் அறிவிப்புக்கமைய உண்ணாவிரதம் கைவிடப்பட்டு ஜனாதிபதிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா சம்பந்தனுக்கும்.கைதிகளுக்கும் நல்லாசி வேண்டி ஆலய வழிபாடுகள் இடம் பெற்றன. தமிழ் தேசியக் கூட்டமைப்பு முக்கியஸ்தர்கள் பலர் இதில் கலந்த கொண்டனர்.

உண்ணாவிரதப் போராட்டம் இடை நிறுத்தப் பட்டமை தொடர்பாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.ராஜேஸ்வரன், கல்முனை மாநகர சபை உறுப்பினர் கு.ஏகாம்பரம், கரைதீவ, பிரதேச சபை உறுப்பினர் கே.ஜெயசிறில் ஆகியோர் கருத்து தெரிவித்ததுடன் கைதிகளின் உறவினர்களும் கருத்து தெரிவித்தனர்.
கருத்துரையிடுக

 
Top