ஆரோக்கியமான வாழ்வு ,போதைப் பொருள் அற்ற வாழ்க்கை, திருப்தியான உடற் பயிற்சி, மன அழுத்தமற்ற வாழ்வு  என்ற கருப் பொருளைக் கொண்டதாக கல்முனை பிராந்திய சுகாதாரப் பணிமனை தொற்றா நோய்ப் பிரிவு  ஏற்பாடு செய்த உலக இருதய தின விழிப்புணர்வு  ஊர்வலமும் அது தொடர்பான விழிப்பூட்டல் கருத்தரங்கும் நேற்று கல்முனை பிராந்திய சுகாதார பணிமனையில் இடம் பெற்றது.

கல்முனை பிராந்திய சுகாதார பணிமனையின் தொற்றா நோய்ப் பிரிவு  வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எம்.ஹாரீஸ் தலைமையில் இடம் பெற்ற விழிப்புணர்வு  ஊர்வலத்தில் பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் டாக்டர் ஏ.அலாவுதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

விழிப்புணர்வு  ஊர்வலத்தில் சுகாதாரப் பணிமனையில் கடமை புரியும் சுகாதாரப் பரிசோதகர்கள்  , உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர். பணிமனையில் இருந்து அரம்பித்த விழிப்புணர்வு  ஊர்வலம் கல்முனை நகர் ஊடாக ஹிஜ்ரா வீதிவரை சென்று கல்முனை மட்டக்களப்பு வீதி வழியாக சுகாதாரப் பணிமனையைச் சென்றடைந்தது. விழிப்பு ஊர்வலத்தில் சென்றவர்கள் இருதய தின விழிப்பூட்டல் துண்டுப் பிரசுரங்களை பொது மக்களுக்கு வினியோகித்தனர்.

ஊர்வலத்தின் முடிவில் சுகாதாரப் பணிமனையில் விழிப்பூட்டல் கருத்தரங்கு நடை பெற்றது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பொது வைத்திய நிபுணர் டாக்டர் என்.ரமேஸ் வளவாளராக கலந்து கொண்டு கருத்தரங்கில் கலந்து கொண்டவர்களுக்கு விளக்கமளித்தார்.

கருத்துரையிடுக

 
Top