கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலைக்கு நேற்று  காலை வருகை தந்த சுகாதார பிரதி அமைச்சர் எம்.சி. பைஸல் காசிம் வைத்திய சாலையைப் பார்வையிட்டதுடன் அங்கு நிலவும் குறைகளையும் கேட்டறிந்து கொண்டார்.

வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஆர். முரளீஸ்வரன் தலைமையில் இடம் பெற்ற இச்சந்திப்பில் சுகாதார துறைக்கு ஒதுக்கப் படும் நிதி ஒதுக்கீட்டில் கல்முனை வடக்கு வைத்தியசாலை மேலும் அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப் படும் என பிரதி அமைச்சர் பைஸல் காசிம் அங்கு உரையாற்றும் போது தெரிவித்தார்

வைத்தியசாலை குறைபாடுகள் அடங்கிய மகஜர் பிரதி அமைச்சரிடம் கையளிக்கப் பட்டதுடன் சுகாதார பிரதி அமைச்சராக பதவியேற்று முதற் தடவையாக வைத்திய சாலைக்கு விஜயம் செய்தமையைப் பாராட்டி பிரதி அமைச்சருக்கு வைத்திய அத்தியட்சகரினால் பொன்னாடை போர்த்தி கௌரவம் வழங்கப் பட்டது.

நிகழ்வில் அமைச்சின் செயலாளர் உட்பட உயர் அதிகாரிகளும் வைத்தியசாலை வைத்திய நிபுணர்களும் வைத்தியர்களும் அங்கு பணியாற்றும் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.கருத்துரையிடுக

 
Top