தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தமை மற்றும் சட்டவிரோதமாகக் கூட்டம் கூடியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில்  கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 17 மாணவர்களை குற்றச்சாட்டுகளிலிருந்து  அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவானும் மேலதிக மாவட்ட நீதவானுமான எச்.எம்.முஹம்மட் பஸீல் இன்று புதன்கிழமை விடுவித்துள்ளார்.
 கடந்த முதலாம் திகதி தென்கிழக்குப் பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது, இடம்பெற்ற அசம்பாவிதத்தில் நிர்வாகக் கட்டடத்;துக்கு சேதம் ஏற்பட்டது. இது தொடர்பாக இரண்டாம் வருடத்தில் கற்கும் மேற்படி மாணவர்களே பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

 இவ்வாறு விடுதலை செய்யப்பட்ட 17 மாணவர்களையும் பல்கலைக்கழக விசாரணைகள் முடிவடையும்வரை பல்கலைக்கழக வளாகத்தினுள்; பிரவேசிப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக பதிவாளர் எச்.அப்துல் சத்தார் தெரிவித்தார்.  

கருத்துரையிடுக

 
Top