இம்முறை நடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் அம்பாறை மாவட்டத்தில் முதலாமிடத்தினை கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசியபாடசாலையில் கல்வி பயிலும் மாணவன் மதுரா கிருஸ்ணசைதன்னியன் 189 புள்ளிகளைப்பெற்று முதலிடத்தினை பெற்றுள்ளார்.
கல்முனை வலயத்தில் அதிகூடிய மாணவர்களை பெற்ற பாடசாலையாகவும் மாவட்டத்தில் முதலாம் இடத்தை இப்பாடசாலை பெற்றுக்கொண்டதுடன் 55 மாணவர்களை இம்முறை வெட்டுப்புள்ளிகளுக்கு மேலாக பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
மாவட்டமட்டத்தில் முதலாமிடத்தினை பெற்ற மாணவன் மதுரா சுமித்திரா தம்பதியினரின் சிரேஸ்ட புதல்வன் என்பதுடன் இவரை கல்லூரி முதல்வர், பிரதி முதல்வர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர்.

கருத்துரையிடுக

 
Top