ஆசிரியர் தினத்தை முன்னிட்டு  கல்முனை கல்வி வலயத்திலுள்ள 65 பாட சாலைகளிலும் ஆசிரியர் தின நிகழ்வுகள் மிகச் சிறப்பாக நடை பெற்றது.

நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மகா வித்தியாலயத்தில் நடை பெற்ற ஆசிரியர் தின வைபவத்தில் கல்லூரியின் பழைய மாணவரும் சமூக சேவையாளரும் வர்த்தக கைத்தொழில் அமைச்சரின் இணைப்பாளருமான சீ.எம்.ஹலீம் பிரதம அதிதியாக கலந்து  கொண்டு சிறப்பித்தார் .
பிரதம அதிதியாக கலந்து கொண்ட ஹலீம்  இவ்வருடம் பாடசாலையில்  குறைந்த லீவு  பெற்ற கே.எல்.குழந்தயும்மா , திருமதி  மரியம் பீவி  ஹனிபா  ஆகிய  இரு  ஆசிரியர்களையும்  பாராட்டி அவர்களுக்கு பரிசும் வழங்கி வைத்தார்.

ஆசிரியர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட கலை கலாச்சார நிகழ்வுகள் இடம் பெற்றதுடன் அங்குள்ள ஆசிரியர்களும் கௌரவிக்கப் பட்டனர்.

இதே வேளை நற்பிட்டிமுனை அல்-கரீம் தையல் பயிற்சி நிலையத்திலும் ஆசிரியர் தின நிகழ்வுகள் இடம் பெற்றது. கல்முனை மாநகர சபை உறுப்பினர் சீ.எம்.முபீத் அங்கு பிரதம அதியாக கலந்து கொண்டு  ஆசிரியர்கள் இருவரை பாராட்டி கௌரவித்தார்.

கருத்துரையிடுக

 
Top