மத்திய அரசும்  மாகாண  அரசும் ஒரே தினத்தில்  வெவேறு  இரு பரீட்சைகளை நடத்துவதால் இரண்டு பரீட்சைகளும் விண்ணப்பித்த விண்ணப்ப தாரிகள்  எந்தப் பரீட்சைக்கு தொற்றுவதென்று  தெரியாத நிலையில்  சங்கடப் படுவதாக பரீட்சைக்கு  விண்ணப்பித்தவர்கள்  தெரிவித்துள்ளார்கள்  .

கிழக்கு மாகாணத்தில் வெற்றிடங்களாகவுள்ள சமூக சேவை உத்தியோகத்தர் பதவிக்கான போட்டிப் பரீட்சை எதிர் வரும் 31.10.2015 சனிக்கிழமை நடை பெறுவதற்கான  நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. அதே வேளை அதே தினத்தில் மத்திய அரசினால்  பதிவாளர் சேவை தரம் 11 க்கான  திறந்த போட்டிப் பரீட்சை நடை பெறவுள்ளது.

இப்பரீட்சை இரண்டுக்கும்  விண்ணப்பித்த கிழக்கு மாகாண  விண்ணப்பதாரிகள் எந்தப் பரீட்சைக்கு தோற்றுவதென்று  திண்டாடுகின்றனர் . இரண்டு பரீட்சைகளுக்கும்   பரீட்சை கட்டண  பணம் செலுத்தியுள்ளனர் . குறித்த விடயம் தொடர்பாக கிழக்குமாகாண முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து  விண்ணப்பித்தவர்களுக்கு இரு பரீட்சையிலும் தொற்றுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என  விண்ணப்பித்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் 

கருத்துரையிடுக

 
Top