(பி.எம்.எம்.ஏ.காதர்)
வாசிப்பதன் மூலமே ஒரு மனிதன் முழு மனிதனாக மாறுகிறான் எனவே ஒவ்வொரு மனிதனும் வாசிப்பவனாக மாறவேண்டும் என துறைநீலாவணை பொது நூலகத்தின் நூலகர் ஜனாபா ஹரீஷா சமீம் தெரிவித்தார்.
தேசிய வாசிப்பு மாதத்தையொட்டி நூலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு இன்று(13-10-2015)நூலக வளாகத்தில் நடைபெற்றது இங்கு  தலைமையுரையாற்றிய போதே நூலகர் ஹரீஷா சமீம் இதனைத் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் அதிதிகளாக பிரசித்த நொத்தாரிஸ் சாமித்தம்பி சுந்தர லிங்கம்,ஓய்வு  பெற்ற அதிபர் சோமநாதன் மயில்வாகனம்,துறைநீலாவணை சித்திவிநாயகர் வித்தியாலய அதிபர் ஏ.மனோகரன்,ஆசிரிய ஆலோசகர் திருமதி எஸ்.தில்லைநாதன்,ஆசிரியர்களான திருமதி கே.மொட்ச நாதன்,திருமதி ஜா.மரமேஸ்வரன்,பி.இதய குமார் மற்றும் நூலக உத்தியோகத்தர்களான கே.கிருபாகரன்,த.சச்சரூபவதிஆகியோருடன் எம்.தினேஸ் துறைநீலாவணை சித்திவிநாயகர் வித்தியாலய மாணவர்களும் கலந்து கொண்டனர். 
இங்கு நூலகர் ஹரீஷா சமீம் மேலும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது:-இப்போது வாசிப்புப் பழக்கம் பிகவும் குறைந்து விட்டது நூலகத்திற்கு வருபவர்கள் மிகவும் குறைந்து விட்டார்கள் நூலகங்கள் வெறிச்சோடிக் காணப்படுகின்றது.
எனவே இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்களும்  இங்குள்ள மாணவர்களும் இந்த நூலகத்தை பயன்படுத்தி வாசிப்புப் பழக்கத்தை அதிகரிக்க முன்வரவேண்டும் எனத் தெரிவித்தார்.
இங்கு பிரசித்த நொத்தாரிஸ் சாமித்தம்பி சுந்தரலிங்கம்,ஓய்வு  பெற்ற அதிபர் சோமநாதன் மயில்வாகனம் ஆகியோர் மாணவர்களுக்கு நீதிக் கதைகளைச் சொன்னாரகள்.மேலும் துறைநீலாவணை சித்திவிநாயகர் வித்தியாலய அதிபர் ஏ.மனோகரன்,ஆசிரிய ஆலோசகர் திருமதி எஸ்.தில்லைநாதன்இஆகியோரும் வாசிப்பின் முக்கியத்துவத்தைப் பற்றி உரையாற்றினார்கள். 


கருத்துரையிடுக

 
Top