கிழக்கு மாகாணத்துக்கு நேற்று சனிக்கிழமை விஜயம் செய்த போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா கல்முனை பஸ் டிப்போவுக்கு சென்று அங்கு நிலவும் குறைபாடுகளை பார்வையிட்டார்.

அங்கு சென்ற அமைச்சரை டிப்போ முகாமையாளர் ஏ.சுபைதீன் தலைமையிலான ஊழியர்கள் வரவேற்றனர்.

இதே வேளை இலங்கை போக்கு வரத்து சபையின் கிழக்கு தலைமைக் காரியாலயத்துக்குச் சென்ற அமைச்சர் மற்றும் அதிகாரிகளை கிழக்குப் பிராந்திய முகாமையாளர் ஏ.எல்.நயீம் தலைமையலான அதிகாரிகள் வரவேற்றனர். 

2005 ஆம் ஆண்டிலிருந்து இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் ஊழியர் சேமலாப நிதி பிரச்சினையாக இருந்து வருகிறது. போக்கு வரத்து சபையின் கொள்கை குறிக்கோள் என்னவென்று தெரியாமல் செயற்படுகின்ற நிலையை அவதானிக்க கூடியதாக உள்ளது. பஸ் டிப்போக்கள் முறையாக இயங்கினால் பிராந்திய அலுவலகங்கள் செயற்படும் தேவை ஏற்படாது. கிழக்கு மாகாணத்தில் தேவைக்கு அதிகமான ஊழியர்கள் கடமை செய்கின்றனர். இதனால் மக்களின் பணம் விரயம் செய்யப் படுகின்றது என அங்கு உரையாற்றிய அமைச்சர் தெரிவித்தார்.

அங்கு கிழக்குப் பிராந்திய முகாமையாளர் ஏ.எல்.நயீம் மற்றும் அதிகாரிகளால் அமைச்சருக்கு பொன்னாடை அணிவித்து கௌரவம் வழங்கப் பட்டது.


கருத்துரையிடுக

 
Top