(பி.எம்.எம்.ஏ.காதர்)

கல்முனை கல்வி வலய முஸ்லிம் கோட்டப் பாடசாலை மாணவர்களுக்கிடையிலான சிறுவர் மெய்வல்லுனர் விளையாட்டு விழா-2015 நேற்று  சனிக்கிழமை  காலை 8.00 மணிக்கு மருதமுனை மசூர்மௌலானா விளையாட்டுத் தொகுதியில் நடை பெற்றது. 

கோட்டக் கல்விப் அதிகாரி எஸ்.எம்.ஏ.ஜஹ்பர் தலைமையில் நடைபெற்ற  இந்த விளையாட்டு விழாவில் பிரதம அதிதியாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர். எம்.எஸ்.அப்துல் ஜலீல் கலந்து சிறப்பித்தார் .கௌரவ அதிதிகளாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் பி.எம்.யாஸீர் அறபாத் , உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.ஜஹாங்கீர்   உட்பட பலர் கலந்து கொண்டனர் 
இந்த விளையாட்டு விழாவில் கோட்டத்திலுள்ள  15 பாடசாலைகளைச் சேர்ந்த 3ம்,4ம்,5ம்  தரங்களில் கற்கும் 700 மாணவர்கள் பங்குபற்றினர்.

கருத்துரையிடுக

 
Top