மக்காவில் ஹஜ் யாத்திரையின்போது மினாவில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களில், இலங்கையர் ஒருவரின் ஜனாஸா அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
கொழும்பிலிருந்து சென்ற தம்பதியர்களான அப்துல் அசீஸ் அபூபக்கர் மற்றும் ரொஷான் ஹாரா காணாமற்போயிருந்ததாக தேடப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் தனது தந்தையான அப்துல் அசீஸ் அபூபக்கரின் ஜனாஸா (உடல்) மக்காவில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவரது மகன் ஹாபிஸ் அபூபக்கர் இணையத்துக்கு  தெரிவித்தார்.
 
மேலும் இது குறித்து சவூதியிலுள்ள இலங்கைத் தூதரகம் தனக்கு உறுதிசெய்துள்ளதாக முஸ்லிம் சமய மற்றும் கலாசார விவகார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
 
அவரது ஜனாஸாவை மக்காவில் நல்லடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
காணமற்போன ரொஷான் தனது தாய் ரொஷான் ஹாரா குறித்து இன்னும் தகவல் எதுவும் கிடைக்கவில்லை என ஹாபிஸ் தெரிவித்திருந்தார்.
 
மேலும் அவர் குறித்த தகவல் இன்று (07) அல்லது நாளை (08) தெரியலாம் என அவரது மகன் எம்மிடம் தெரிவித்திருந்தார்.

கருத்துரையிடுக

 
Top