(யு.மொஹமட்  இஸ்ஹாக்) 

அம்பாறை மாவட்ட அன்னமலைக் கிராமத்தில் முதல் முறையாக இலங்கை நிருவாக சேவைக்கு ஒருவர் தெரி செய்யப்பட்டுள்ளார். தெரிவு  செய்யப்பட்ட சூரிய குமார் பார்த்தீபனுக்கு அன்னமலை மக்கள் ஒன்று கூடி பாராட்டி கௌரவித்தனர்.

இந்த பாராட்டு கௌரவிப்பு விழா சனிக்கிழமை  அன்னமலை சக்தி கலயரங்கில் விழாக்குழு தலைவர் ஓய்வு  பெற்ற கோட்டக் கல்விப் பணிப்பாளர் பொன் செல்வநாயகம் தலைமையில் இடம் பெற்றது.

அடிப்படை வசதிகளின்றி வறிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்த பார்தீபன் அன்னமலை  மகா வித்தியாலயத்தியாலயத்தில் கல்வி கற்று  5ஆம் தர புலமைப் பரீட்சையில் சித்தி பெற்று வகுப்பறைக் கற்றலுடன் மாத்திரம் சாதாரண தரப்பரீட்சையில் 10ஏ சித்திகளைப் பெற்று தான் பிறந்த மண்ணுக்கு  முதல் தடவையாக பெருமை சேர்த்தார். கல்முனை கார்மேல் பற்றிமாவில் விஞ்ஞான உயர்தரம் கற்று முதல் தடவையில் சித்தி பெற்று பல்கலைக் கழகத்துக்கும் தெரிவாகி விஞ்ஞான மானிப் பட்டதாரியாக வெளியானார். 

இளம் விஞ்ஞானப் பட்டதாரியான பார்தீபன்  2014 இல் நடை பெற்ற  இலங்கை நிருவாக சேவைக்கான திறந்த போட்டிப் பரீட்சைக்கு தோற்றிய 30ஆயிரம் பேரில்  தெரிவான 172 பேருக்குள் 14வது இடத்தைப் பெற்றவராக தெரிவானார்.

பார்தீபனை கௌரவிக்கும் விழாவில் கல்முனை.நாவிதன் வெளி, காரைதீவூ, ஆலயடி வேம்பு, திருக்கோவில் பிரதேச செயலாளர்கள் உட்பட உயர் அதிகாரிகள்.அரசியல் பிரமுகர்கள்,அதிபர்கள்,ஆசிரயர்கள்,தனவந்தர்கள் எனப் பலர் கலந்து வாழ்த்து தெரிவித்தனர்.

தான் ஆரம்பக் கல்விகற்ற பாடசாலையிலிருந்து ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட பார்தீபனுக்கு ஊர்மக்கள் ஒன்று கூடி தங்கப் பதக்கம் அணிவித்து கௌரவித்தனர்.
கருத்துரையிடுக

 
Top