சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்குட்பட்ட வாழ்வின் எழுச்சி பயனாளிகளின் 'முத்தான வியர்வை எனும் தொனிப்பொருளிலான வாழ்வின் எழுச்சி உற்பத்தி கண்காட்சியும் விற்பனையும் சாய்ந்தமருது வொலிவேரியன் சுனாமி வீட்டுத்திட்ட வளாகத்தில் நேற்று வெகு விமர்சியாக இடம்பெற்றது.

சாய்ந்தமருது பிரதேச செயலக திவிநெகும பிரிவின் ஏற்பாட்டில் அதன் தலைப்பீட முகாமையாளர் ஏ.சீ.ஏ.நஜீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் அஸ்-ஷெய்க் எம்.ஐ.அமீர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கண்காட்சி கூடாரங்களை திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் சாய்;ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், அம்பாறை மாவட்ட திவிநெகும பணிப்பாளர் சந்தரூபன் அனுருத்த ஆகியோர் விசேட அதிதிகளாகவும் மற்றும் கணக்காளர் எம்.எம்.உசைமா, நிர்வாக உத்தியோத்தர் எம்.எம்.உதுமாலெவ்வை, திவிநெகும முகாமையாளர்களான எஸ்.றிபாயா, ஏ.ஆர்.எம்.பர்ஹான், எம்.எஸ்.எம.மனாஸ், உதவி முகாமையாளர்களான எம்.யூ.ஹில்மி, எம்.எம்.எம.முபாறக், ஏ.எம்.எம்.றியாத், திட்ட உதவியாளர் எம்.எஸ்.எம்.நௌஷாட், உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோத்தர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசியர்கள், மாணவர்கள், வாழ்வின் எழுச்சி பயனாளிகள், பொதுமக்கள் என பெரும் திரளானோர் கலந்து கொண்டனர்.

இதன்போது பொதுமக்கள் வாழ்வின் எழுச்சி பயனாளிகளின் உற்பத்திப் பொருட்களை கொள்வனவு செய்து அவர்களின் உற்பத்திக்கு ஆதரவு வழங்கியனர். மேலும் திவிநெகும பிரிவினால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவிகள் மூலம் உதவிகள் பெற்றோர் தங்களது உற்பத்திப் பொருட்களை காட்சிப் படுத்தியிருந்தனர்.

மேலும் இதன்போது அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் அஸ்-ஷெய்க் எம்.ஐ.அமீர் மற்றும் அம்பாறை மாவட்ட திவிநெகும பணிப்பாளர் சந்தரூபன் அனுருத்த ஆகியோர் இந்த உற்பத்தி கண்காட்சியையும் விற்பனை நிகழ்வையும் பொது மக்களைகளையும், எங்களையும் கவரக்கூடியவாறு மிகச் சிறப்பாக ஏற்பாடுகளை செய்த சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் மற்றும் திவிநெகும தலைப்பீட முகாமையாளர் ஏ.சீ.ஏ.நஜீம் தலைமையிலான திவிநெகும முகாமையாளர்கள், திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், திவிநெகும பயனாளிகளுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

இவ் உற்பத்தி கண்காட்சியும், விற்பனையும் இசை நிகழ்ச்சியுடன் வெகுவிமர்சியாக நிறைவு பெற்றது. 

கண்காட்சியின் நிறைவு நிகழ்வில் அதிதியாக கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.டவுள்யூ.ஏ.கபார் கலந்து கொண்டு சிறந்த உற்பத்தியாளர்களுக்கான பரிசில்களை வழங்கி வைத்தார்.

கருத்துரையிடுக

 
Top