(பி.எம்.எம்.ஏ.காதர்,யு.எம்.இஸ்ஹாக் )

மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியில் 90 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தொழில் நுட் பவியல் ஆய்வு கூடமும்,அல்-ஹிக்மா கனிஷ்ட பாடசாலையில் 40 இலட்சம் ரூபா செலவில் நிர்மானிக்கப் பட்டுள்ள வகுப்பறைக் கட்டமும் திறந்து வைத்த நிகழ்வு  நேற்று  புதன்கிழமை(14-10-2015)இடம் பெற்றது.
இந்த நிகழ்வில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக் கலந்து கொண்டு கட்டங்களைத் திறந்து வைத்த்தார்.
சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போது அவர் எடுத்த  பெரும் முயற்சியி
ன் காரணமாக 2013ம் ஆண்டு ஜூலை மாதம் 21ம் திகதி இந்த தொழில் நுட்பவியல் ஆய்வு  கூடத்திற்கான அடிக்கல் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸினால் நடப்பட்டது.
இன்று இந்தக் கட்டடம் 90 இலட்சம் ரூபா செலவில் பூரணப்படுத்தப்பட்டு 64 கணணிகளும் ஏனைய உபகரணங்களும் அடங்கலாக மாணவர்கள் பயன்பெறும் வகையில் பாடசாலை சமூகத்திடம் கையளிக்கப்பட்டது.

அதே போன்று பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் எடுத்த மற்றுமொரு முயற்சியாக மருதமுனை அல்-ஹிக்மா கனிஷ்ட பாடசாலையில் 2014ம் ஆண்டு நவம்பர் மாதம் 14ம் திகதி வகுப்பறைக் கட்டத்திற்கான அடிக்கல்  அவரினாலேயே நடப்பட்டது. இக்கட்டடம் 40 இலட்சம் ரூபா செலவில் இப்போது பூரணப்படுத்தப்பட்டு  திறந்து வைக்கப்பட்டது.
ஷம்ஸ் மத்திய கல்லூரி அதிபர் எஸ்.எம்.எம்.அமீர் தலைமையில் நடைபெற்றது இந்த நிகழ்வில்  கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன்,விஷேட அதிதியாக கல்முனை வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல்,அதிதிகளாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் பி.எம்.யாஸிர் அரபாத், கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப்,ஏ.ஆர்.எம்.அமீர்,ஏ.எல்.எம்.முஸ்தபா,எம்.எஸ்.உமர் அலி  ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மேலும் பாடசாலை அபிவிருத்திச் சபை உறுப்பினர்கள்,பாடசாலை நலன்விரும்பிகள்,பெற்றோர்கள் மாணவர்கள் பொது மக்கள் என பெரும் தொகையானோர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

 
Top