சமாதான கற்கைகள் நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி எஸ்.எல். றியாஸ் எழுதிய ”நேர்முகத்தேர்வு தொடர்பான நுட்பங்களும், திறன்களும்” எனும் வெளியீட்டு விழா நேற்று முன்தினம் (03) சம்மாந்துறை தாறுஸ்ஸலாம் மகாவித்தியாலய கேட்போர் கூடத்தில் சம்மாந்துறை ஹிஜ்ரா முஸ்லிம் வித்தியால அதிபர் ஏ.ஏ. அமீர் தலைமையில் இடம்பெற்றது.
இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் முதற் பிரதியினை நுாலாசிரியரிடமிருந்து பெற்றுக்கொண்டார்.
நுால் விமர்சன உரையினை தென்கிழக்கு பல்கலைக்கழக மொழித்துறைத் தலைவர் கலாநிதி றமீஸ் அப்துல்லாவும். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எம்.எம். நௌஷாத் நுால் பற்றிய கருத்துரையினையும் நிகழ்த்தினார்கள்.
ஏற்புரையினையும், நன்றியுரையினையும் நுாலாசிரியர் கலாநிதி எஸ்.எல். றியாஸ் வழங்கினார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹீர், கொழும்பு டொப் பிரிண்டஸ் தலைவர் சமீர் யுனுாஸ் உட்பட கல்விமான்கள், கலைஞர்கள், கவிஞர்கள் உள்ளிட்ட பல பிரமுகவர்களும் கலந்து கொண்டனர்கள்.





கருத்துரையிடுக

 
Top