கல்முனை மாநகர சபை தமிரசுக் கட்சியின் புதிய உறுப்பினராக குஞ்சுத்தம்பி ஏகாம்பரம் இன்று புதன்கிழமை (14) சத்தியப்பிரமாணம் செய்து பதவியேற்றுக் கொண்டார்.
கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி முன்னிலையில் அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
கல்முனை மாநகர சபையின் தமிழரசுக் கட்சி உறுப்பினராகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் பதவி வகித்த ஏ.அமிர்தலிங்கம் அண்மையில் காலமானதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே அக்கட்சியின் வேட்பாளர் பட்டியலில் அடுத்த நிலையில் இருந்த கு.ஏகாம்பரம் கட்சி செயலாளரின் சிபார்சின் பேரில் அம்பாறை உதவித் தேர்தல் ஆணையாளர் திலின விரமரத்னவினால் புதிய உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.


கருத்துரையிடுக

 
Top