கூட்டுறவு அபிவிருத்தி சபைக்கான தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியல் பயிற்ச்சி நிலையம் திறந்து வைக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை (14) கல்முனை கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் அலுவலக கட்டிடத்தில் இடம்பெற்றது.
அம்பாரை மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி சபையின் தலைவர் இஸட்.ஏ. லத்தீப் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இதனை திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் கல்முனை கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் வை.எல்.எம்.பதுர்தீன், கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கனி, விஎஃபெக்ட் நிறுவனத்தின் பணிப்பாளர் எஸ்.திஸாநாயக்க, கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.ஏ.வசீர், கூட்டுறவு அபிவிருத்தி சபையின் உறுப்பினர்கள், கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கூட்டுறவு அபிவிருத்தி சங்கங்களின் பிரதிநிதிகள், கல்வி கற்கும் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இலங்கை தேசிய கூட்டுறவுச் சபையினால் கூட்டுறவு ஆற்றல் அபிவிருத்திச் செயற்திட்டத்தின் கீழ் விஎஃபெக்ட் நிறுவனம் இணைந்து இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துகின்றது.
கருத்துரையிடுக

 
Top