இலங்கையின் 4 வது அபகஸ் மன எண்கணிதப்  போட்டியில் நிந்தவூரைச்சேர்ந்த மாணவி செல்வி எம். என். பாத்திமா சிம்தா  அகில இலங்கை ரீதியாக முதலாவது இடத்தினைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
 
நிந்தவூர் அல்-மஸ்லம் வித்தியாலயத்தில் தரம் 01இல் கல்வி கற்கும்  இவர் கடந்த செப்டெம்பர் 27ஆம் திகதி பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இதற்கான போட்டிகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
வயது அடிப்படையில் இடம் பெற்ற UCMAS, அபகஸ்  போட்டிகளில் பங்குபற்றிய இவர், வெற்றி பெற்று முதலாவது இடத்தினைப் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
 

கருத்துரையிடுக

 
Top