கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற புலமைபரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் 12ஆம் திகதி வௌியிடப்படவுள்ளன என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்  டப்ளியு. எம்.என்.ஜே. பஷ்பகுமார தெரிவித்தார்.
பெறுபேறுகளை வௌியிடுவதற்கான அனைத்து ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன என ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.
புலமை பரிசில் பரீட்சை விடைதாள்கள் கடந்த செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி தொடக்கம் 14ஆம் திகதி வரை நடைபெற்றது. இப்பணிகளில்  6256 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
நாடு முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 2907 பரீட்சை மத்தியநிலையங்களில் 8இலட்சத்து 40ஆயிரத்து 926 மாணவர்கள் பரீட்சை எழுதியமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

 
Top