21 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரப்பூர்வ காலம்  15ம் திகதியுடன் நிறைவடையவுள்ள அதேவேளை மேலும் 2 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரப்பூர்வ காலம் இம்மாதம் 31ம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.
இந்தநிலையில் அந்த 23 உள்ளூராட்சி மன்றங்களினதும் ஆட்சிக் காலத்தை இந்த வருடம் டிசம்பர் மாதம் 31ம் திகதி வரை நீடிப்பதாக மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். அதன்படி உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் பிற்போடப்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது.

கருத்துரையிடுக

 
Top