கல்முனை இஸ்லாமாபாத்  யங் மவுண்ட் விளையாட்டுக் கழகத்தின் 15 ஆவது ஆண்டு நிறைவு வைபவமும் புதிய நிருவாக தெரிவும் இன்று மாலை கல்முனை இஸ்லாமாபாத்  கழக அலுவலகத்தில் இடம் பெற்றது.

ஐக்கிய தேசியக் கட்சி கல்முனை வலய  அமைப்பாளர் எஸ்.எல்.எஸ்.முஹீஸ் நெறிப்படுத்தலில் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் ஏ.எம்.ஏ.ரகுமான் தலைமையில் இட்சம் பெற்ற நிகழ்வில் கிராமிய ஆரம்பக் கைத்தொழில் அமைச்சர் தயாகமகேயின்  இணைப்பாளரும் சட்டத்தரணியுமான எம்.எஸ்.ஏ.ரஸாக்  பிரதம அதிதியாகவும் ,கல்முனை காழி நீதிபதி என்.எம்.இஸ்மாயில் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .

கலந்து கொண்ட அதிதிகள் கழகத்தின் வளர்ச்சி பற்றியும்  எதிர்கால நடவடிக்கை பற்றியும் உரையாற்றினார்கள்.

கழகத்தின் நடப்பு வருட தலைவராக மீண்டும் ஏ.எம்.ஏ.ரகுமான் மீண்டும் ஏகமனதாக தெரிவு செய்யப் பட்டதுடன் பிரதி தலைவராக ஏ.பீ.றியால் ,உப தலைவராக எஸ்.எல்.எஸ்.முஹீஸ் ,உப செயலாளராக எம்.இர்ஷாத் ,பொருளாளராக எச்.எம்.ரியாஸ், உப பொருளாளராக ஏ.பீ.ரம்ஸான் , கணக்காயவாளராக ஏ.எம்.றம்சத் ,கழக ஆலோசகர்களாக கே.எம்.பாறூக் ,என்.நிஸார் ,எம்.ஹுசைன் ஆகியோரும் கழகத்தின் சட்ட ஆலோசகராக  சட்டத்தரணி எம்.எஸ்.ஏ.ரஸாக் அவர்களும் தெரிவு செய்யப் பட்டனர் .

நிருவாகத் தெரிவின் முடிவில்  விளையாட்டுக் களகத்தினர் ஏற்பாடு செய்த இராப்போசனமும் இடம் பெற்றது 
கருத்துரையிடுக

 
Top