ஒலுவில்  தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அண்மையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 13 மாணவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

குறித்த பல்கலைக்கழகத்தின் மாணவர் விடுதி தொடர்பிலான பிரச்சினைகளுக்காக அண்மையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, பல்கலைக்கழக கட்டடங்களுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டது. 

குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 13 மாணவர்களும் அக்கரைப்பற்று நீதவான் எம்.எம்.மொஹமட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். 

இதனையடுத்து இவர்களை எதிர்வரும் 20ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். 

கருத்துரையிடுக

 
Top