பிள்ளையானை எதிர்வரும் நவம்பர் 04ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தை கடந்த 2005 இல் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைதாகியுள்ள பிள்ளையான் என அழைக்கப்படும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை குறித்த கொலை தொடர்பில் விசாரிப்பதற்காக இரகிசய பொலிஸாருக்கு அனுமதி வழங்கிய நீதவான் இவ்வாறு விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டிருந்தார்.
அவர், ஏற்கனவே 72 மணித்தியாலங்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

 
Top