ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரஃப் அவர்களின் நினைவு தின நிகழ்வுகள் அம்பாறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும்இன்று புதன்கிழமை (16) நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
விஷேடமாக கல்முனை தொகுதியில் தலைவர் தினம் பிரகடனப்படுத்தப்பட்டு 2வது ஆண்டை முன்னிட்டு பிரதேசத்திலுள்ள பாடசாலைகளில் நினைவுப் பேருரைகளும், துஆப் பிரார்த்தனைகளும் கத்தமுல் குர்ஆன் வைபவங்களும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் இடம்பெறவுள்ள இதேவேளை இன்று  இரவு இஷா தொழுகையை தொடர்ந்து  சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தி;ல் கத்தமுல் குர்ஆன் வைபவமும், துஆப் பிரார்த்தனையும் இடம்பெறவுள்ளது.

கருத்துரையிடுக

 
Top