எட்டாவது பாராளுமன்றத்தின் எதிர்கட்சி தலைவராக தெரிவு செய்யப் பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்  இரா சம்பந்தனுக்கு  நல்லாசி வேண்டி  நேற்று  அம்பாறை மாவட்டத்தில் 10க்கும் மேற்பட்ட  இந்து ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் இடம் பெற்றன .

கிழக்கு மாகாண  சபை உறுப்பினர் பேராசிரியர்  எம்.இராஜேஸ்வரன் தலைமையில்  இடம் பெற்ற  பூஜை வழிபாடுகளில் முதல் நிகழ்வாக நற்பிட்டிமுனை ஸ்ரீ அம்பலத்தடி சித்தி விநாயகர் ஆலயத்தில்  ஆலயக் குரு சிவஸ்ரீ  மோகானந்தக்  குருக்கள் தலைமையில்  வழிபாடுகள் இடம் பெற்றன. 
இவ்வழி பாட்டில்  தமிழ் தேசியக் கூட்டமைப்பு முக்கியஸ்தர்கள் பலரும் பொது மக்களும் கலந்து கொண்டனர் 


கருத்துரையிடுக

 
Top