தேசிய அரசாங்கத்தில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சராக இன்று அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் பதவிப்பிரமாணம் செய்து கொண்ட திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பதவிப்பிரமாணம் செய்து கொண்ட பின்னர் ஜாவத்த ஜும்ஆப் பள்ளிவாசலில் இடம்பெற்ற விசேட துஆப் பிரார்த்தனையிலும் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத்தலைவரும் அமைச்சருமான றவுப் ஹக்கீம் , சுகாதார பிரதியமைச்சர் பைஸல் காசிம் , மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா, பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.சல்மான் உள்ளிட்ட கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

 
Top