பஞ்ச பாண்டவர் வனவாசத்தில் தீ சட்டி ஏந்தி நேர்த்தி கடன் தீர்த்த பெண் மரணமான சம்பவம் இன்று இடம் பெற்றுள்ளது .

பாண்டிருப்பு பஞ்ச பாண்டவர்கள் வரலாறு கூறும்  திரௌபதை அம்மன் ஆலய  வனவாச உற்சவம்  இன்று  3.00 மணிக்கு ஆலயத்தில் இருந்து புறப்பட்டது . இந்த வனவாச நிகழ்வில் நேர்த்திகடனை நிறைவேற்றும் பொருட்டு  காவடி எடுத்தல், தீ சட்டி ஏந்துதல் என்பன இடம் பெறுவன .

அவ்வாறு தீ சட்டி ஏந்தி காணிக்கையை நிறைவேற்றிய நட்பிட்டிமுனையை சேர்ந்த  54 வயதுடைய யோகேஸ்வரி என்பவர் நற்பிட்டிமுனை முருகன் ஆலயத்தில் மயங்கி வீழ்ந்துள்ளார் . அவரை கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு  எடுத்துவரும் வேளை  மரணமடைந்துள்ளார் .
அவரது சடலம்  நட்பிட்டிமுனையில் அவரது இல்லத்தில் வைக்கப் பட்டுள்ளது 

கருத்துரையிடுக

 
Top