கல்முனை நகரின்  மத்தியில் அக்கரைப்பற்று - மட்டக்களப்பு பிரதான வீதியின் ஒரு  வழிப் பாதையில் ஒரே பக்கமாக பயணித்த இரு மேட்டார் சைக்கில்கள் நேற்று மாலை ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் ஒருவரின் கால் ஒன்று  இரண்டாக முறிந்த  நிலையில் விபத்துக்குள்ளான இருவரும்  கல்முனை வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டனர்.

விபத்துக்குள்ளான இருவரும் ஆபத்தான நிலையில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் அவசரப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு  கால் முறிந்தவர்  மேலதிக சிகிச்சைக் காக  மட்டக்களப்பு  போதனா  வைத்திய சாலையில்  சிகிச்சை  பெற்று வருவதாகவும் விபத்துக்குள்ளான மற்றையவர்  கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையில்  சிகிச்சை பெற்று வுவதாகவும் இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் இடம் பெற்று வருவதாகவும் கல்முனைப் பொலிஸார் தெரிவித்தனர்.கருத்துரையிடுக

 
Top