கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில் நிர்மாணிக்கப் பட்ட நுழை வாயில் நாளை (28) உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப் படவுள்ளது .

கல்லூரியின் பழைய மாணவனும் விளையாட்டுத் துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின்  20 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில்  நிர்மாணிக்கப் பட்ட நவீன நுழைவாயில் நாளை திங்கட் கிழமை காலை10.00 மணிக்கு திறந்து வைக்கப் படவுள்ளது .

கல்லூரியின் முதல்வர் அருட் தந்தை பிறைனர் செல்லர்  தலைமையில் இடம் பெறும் வைபவத்தில் விளையாட்டு  துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நுழை வாயிலை திறந்து வைக்கவுள்ளார் .

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண  கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிஸாம் விசேட அதிதியாகவும் , கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.ஜலீல் கௌரவ அதிதியாகவும்  மற்றும் பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான வே.மயில் வாகனம்,எஸ்.எல்.ஏ.ரஹீம்,பீ.எம்.வை.அரபாத்,ஏ.எல்.எம்.முக்தார்  ஆகியோரும்  முன்னாள் கல்முனை பிரதேச செயலாளர் மங்கள விக்ரமாராட்சி, கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலாளர் கே.லவநாதன் ,உதவி திட்டமிடல் பணிப்பாளர் ரே.மோகனகுமார்  ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும்  கல்முனை தமிழ் பிரிவு கொட்டக் கல்விப் பணிப்பாளர் பீ.ஜெகநாதன், முன்னாள் கல்லூரி முதல்வர் அருட் சகோதரர்  ஸ்டீவன் மத்தேயு ,பொறியியலாளர்களான பீ.ஹென்றி அமல்ராஜ்,ஜி.அருண் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும்  கலந்து கொள்ளவுள்ளனர் 

கருத்துரையிடுக

 
Top