சகல பிள்ளைகளுக்கும் கட்டாயக் கல்வி மூலம் எழுத்தறிவினை வழங்கி முழுமையான கல்வி சமூகத்தினை  உருவாக்கி  நிரந்தர அபிவிருத்தியை ஏற்படுத்துவோம் என்ற கருப் பொருளில்  கல்முனை வலயக் கல்வி அலுவலக முறைசாராக்கல்விப் பிரிவு ஏற்பாடு செய்த சர்வதேச எழுத்தறிவு தின வைபவம் இன்று கல்முனை வலயக்  அலுவலகத்தில் இடம் பெற்றது.

  எழுத்தறிவு தின விழிப்புணர்வு ஊர்வலமும் , இடைவிலகியிருந்து  மீண்டும்  பாடசாலையுடன் இணைக்கப் பட்ட மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்வும் உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.சக்காப் தலைமையில் இடம் பெற்றது .

நிகழ்வில்   பிரதம அதிதியாகவும் கௌரவ ,அதிதியாகவும் கலந்து கொண்ட வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல், எல்.ரீ.சாலிதீன் ஆகியோர்  விழிப்பு ஊர்வலத்தை ஆரம்பித்து வைத்து  இடை விலகி இணைந்த  மாணவர்களுக்கு பரிசும்  வழங்கி வைத்தனர் .

வலயக் கல்வி அலுவலகத்தில் இருந்து ஆரம்பமான ஊர்வலம் கல்முனை நகர் ஊடாக சென்று  மீண்டும் அலுவலகத்தை சென்றடைந்தது.

நிகழ்வுகளில் முறைசாராக்கல்வி பிரிவு உத்தியோகத்தர்கள் , ஆசிரிய ஆலோசகர்கள் ,ஆசிரியர்கள் உட்பட பலர்  கலந்து கொண்டனர் 


கருத்துரையிடுக

 
Top