(அகமட் எஸ். முகைடீன்)

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிசாத் பதியுதீன் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சராக இன்று பிற்பகல் கொள்ளுபிட்டி  காலி வீதியில் அமைந்துள்ள அமைச்சில் உத்தியோகபூர்வமாக கடமைகளை  பொறுப்பேற்றுக் கொண்டார்.

நாட்டின் பல பாகங்களிலிருந்தும் வருகை தந்த பெருந்திரளான ஆராவாளர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான மஹ்ரூப், இஸ்ஹாக் ஹாஜி, நவவி, அங்கஜன் இராமநாதன், அமைச்சின் முன்னாள் செயலாளர் எஸ்.எஸ்.மியான்வல்ல, அமைச்சின் புதிய செயலாளர் ரி.எம்.கே.பி.தென்னகோன், அமைச்சின் அதிகாரிகள், பாராளு மன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களான முன்னாள் கல்முனை மாநகர முதல்வர் சிராஸ் மீராசாஹிப், இஸ்மாயில் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மூன்றாவது தடவையாகவும் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சராக கடமைகளை பொறுப்பேற்கும் அமைச்சர் றிசாத் பதியுதீனிற்கு இதன்போது அமைச்சின் ஊழியர்களினால் கோலாகலமான வரவேற்பு வழங்கப்பட்டது.கருத்துரையிடுக

 
Top