எஸ்.எம்.எம்.றம்ஸான் )


கடந்த 14 வருடகாலமாக கல்முனைப் பிரதேசத்தில் தரம் 6 தெடக்கம் உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு இலவசமாக எபிக் கல்வி நிலையத்தின் ஊடாக கல்விச் சேவையை வழங்கி வரும் கல்முனை எபிக் ( EFIC ) அமைப்பினர் அம்மாணவர்களின் நலன் கருதியும் அம்மாணவர்களை நவீன உலகிற்கு தயார் செய்யும் நோக்கோடு மாணவர்களின் கணணி அறிவை மேம்படுத்துவதற்காக கணணி கற்கை நிலையம் ஒன்றை கடந்த ஞாயிற்றுக் கிழமை  கல்முனை சாஹிபு வீதியில் திறந்து வைத்தனர்.

அமைப்பின் தலைவர் எம்.எம்.சிறாஜி தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் கல்முனை கிறீன்பீல்ட் கூட்டு முகாமைத்துவ ஆதணசபையின் தலைவரும், சமூக சேவையாளரும், தொழில்லதிபருமான ஏ.எல்.எம்.கபுல் ஆஸாத் ஹாஜி பிரதம அதிதியாக கலந்து கொண்டு இந்நிலையத்தை திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் அதிதிகளாக ஓய்வு பெற்ற கல்விக்கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர்களான எம்.ஐ.எம்.முஸ்தபா, எச்.எம்.ஆதம்பாவா மற்றும் சிரேஷ்ட ஆசிரியர் யு.எம்.அலி உட்பட இவ்வமைப்பின் உறுப்பினர்கள், ஊர் பிரமுகர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கருத்துரையிடுக

 
Top