ஒலுவில் கடற்பரப்பில் மிக நீண்ட நாட்களாக ஏற்பட்டு வரும் கடலரிப்பு மற்றும் மீனவர் பிரச்சினை சம்பந்தமாக நேரில் கண்டறி வதற்காக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் ஆகியோர் 
நான் முந்தி நீ முந்தி என ஒலுவில் கடற்கரைக்கு சென்று பார்வையிட்டதுடன் மீனவர்களுடன்   மீனவர் பிரச்சினை சம்பந்தமாகவும் கலந்துரையாடியுள்ளனர்.
இவர்கள் இருவரும்  ஒன்றாக இணைந்து அந்த மக்களின் வாழ்வாதார  விடயத்தில் கவனம் செலுத்தாமல் எதிர்வரும் ஊள்ளூராட்சி தேர்தலுக்கான ஓட்டம் என மக்கள் முணு முணுக்க தொடக்கி உள்ளனர் . பாராளுமன்ற தேர்தல் முடிந்து விட்டது அதில்தான் போட்டி பொறாமை எல்லாம் நிகழ்ந்தது  அவற்றை எல்லாம் மறந்து இந்த விடயத்தில் ஒன்றாக நடவடிக்கை எடுக்காமல் நான் முந்தி நீ முந்தி என இன்று மக்களுக்கு ஆடிய நாடகம் மக்களை கவலை அடைய செய்துள்ளது 

இவர்களின் இந்த விஜயம் உண்மையாகவே மக்களின்  சேவை நலன் கருதியா? அல்லது தனது எதிரி அப்பிரதேச மக்களிடம் செல்வாக்கைத் தேடி விடுவார் என்ற நோக்கமா?

இப்படி நான் முந்தி நீ  முந்தி என ஒலுவிலை நோக்கி ஓடி வந்து கடலரிப்பை பார்வையிட்ட அமைச்சர்கள்  ஒலுவில் மக்களின் இந்த அவலத்தைப் போக்க  அமைச்சர்களின்  எதிர்கால செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்பதை அம்பாறை மாவட்ட மக்கள் உன்னிப்பாக கவனித்துக்கொண்டேதான் இருக்கப் போகின்றார்கள்.

 

கருத்துரையிடுக

 
Top